இளம்தாரை படகு எட்டு வருடங்களின் பின்னர் தற்போது செயற்பாட்டில் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளம்தாரை படகு எட்டு வருடங்களின் பின்னர் தற்போது செயற்பாட்டில்

விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் போர்முனை செயற்பாடு தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்படை தளபதி சூசையின் பிரதான கட்டுப்பாட்டு அறைகளை கொண்ட படகு தற்போது வெளி உலகுக்கு காட்சியளித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடற்புலிகளுக்கு சொந்தமான இளம்தாரை என்ற படகு எட்டு வருடங்களின் பின்னர் தற்போது செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் அனுமதியின்றி 8 வருடங்களின் பின்னர் மீண்டும் முல்லைத்தீவு கடலில் படகு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த படகினை முல்லைத்தீவு கடலில் செயற்படுத்தியது யார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
கடற்களமுனையில் இடம்பெற்ற பல சமர்களின் போது, கடற்படைத் தளபதி சூசை இந்த படகிலிருந்து கட்டளைகளை பிறப்பித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி முல்லைத்தீவு கடலில் படகு பயணித்தமையானது, இலங்கை பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS