யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரிவெனா ஒன்றில் பயிலும் தேரர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொபெய்கனே பொலிஸார் தெரிவித்தனர்.
கொபெய்கனே பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரிவெனாவில் கற்று வந்த 19 வயதுடைய இளம் தேரர் ஒருவரே இவ்வாறு 18 வயதுடைய யுவதியை தாக்கியுள்ளதுடன் அவளது கைப்பேசியையும் உடைத்து நொறுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தேரரால் தாக்கப்பட்ட யுவதியோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக குறித்த யுவதி பணியாற்றும் இடத்திற்கு சென்றுள்ள தேரர் அவளை தாக்கி அவளிடமிருந்த சுமார் இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான கைப்பேசியையும் தரையில் அடித்து நொறுக்கியுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.