வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தனது அந்தரங்க உறுப்பினை காட்டி வருவதை வழக்கமாக கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெல்லவாய பகுதியில் உள்ள பல கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனது அந்தரங்க உறுப்பினை தொடர்ந்து காட்டி வந்ததாத தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 20 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.