இலங்கையில் மாணவியை கர்ப்­பி­ணி­யாக்கிய ஆசிரியர்!! மனைவியின் நடத்தை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கையில் மாணவியை கர்ப்­பி­ணி­யாக்கிய ஆசிரியர்!! மனைவியின் நடத்தை

பதி­னான்கு வய­து­டைய பாட­சாலை சிறுமி மீது பாலியல் வல்­லு­றவு புரிந்து இரு மாத கர்ப்­பி­ணி­யாக்­கிய சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுள்ள களுத்­துறை நகரில் உள்ள பிர­பல பாட­சா­லை­ஒன்றில் கட­மை­யாற்றும் ஆசி­ரி­யரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு களுத்­துறை பிர­தம நீதிவான் பாரதி விஜே­ரத்ன உத்­த­ர­விட்டார்.
இந்த ஆசி­ரி­யரின் மனை­வி­யையும் பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து நீதவான் முன்­னி­லையில் ஆஜர் செய்த சமயம் இரண்டு இலட்சம் ரூபா­வுக்கு இரு சரீரப் பிணை­யிலும் 15000 ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும் செல்ல நீதிவான் அனு­ம­தி­ய­ளித்தார்.
இவரும் களுத்­துறை நகரில் உள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் ஆசிரியையாக கடமை புரி­கிறார்.
தனது கண­வ­ரினால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு இரு மாத கர்ப்­பி­ணி­யான பாட­சாலை சிறு­மியின் சிறுநீர் மாதி­ரியைப் பெற்று பரி­சோ­தனை செய்­தமை சிறு­மியின் நிர்­வாணப் படங்­களை எடுத்து கணவர் சேவை­யாற்றும் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கு அனுப்­பி­யமை தொடர்­பா­கவே களுத்­துறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்­ப­தி­காரி மல்சா துசா­ரி­யினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டார்.
இந்த ஆசி­ரியர் தம்­ப­தி­யி­ன­ருக்கு கர்ப்­பி­ணி­யாக்­கப்­பட்ட 14 வய­து­டைய சிறு­மியை ஒத்த வய­து­டைய பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் தெரிய வரு­கி­றது.
சந்­தேக நப­ரான ஆசி­ரி­ய­ருக்கு சிறு­மியை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்த அறை வசதி செய்து கொடுத்த களுத்­துறை பகுதி விடு­தி­யொன்றின் உரி­மை­யாளர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார்.
அதன் முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS