அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த ஆண்டு 22-09-2016 அன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சற்றேறக்குறைய 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்த நர்ஸ் க்ளோரியா தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அவரும் அவரது குழந்தைகளும் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அயனாவரத்தை சேர்ந்த அவரது கணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டு இறந்த நிலையில் க்ளோரியாவும் தற்கொலைக்கு முயன்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் மருத்துவ உதவிகளை செய்து வந்தவர் என்பதால், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்திற்கும் இவரது தற்கொலை முயற்சிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து சீரிய விசாரணை செய்திட வேண்டுமே கோரிக்கை விடுத்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.