திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிசு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் ஆண் சிசு

இலங்கையின் கிழக்கே திருகோணமலை காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையிலுள்ள ஆண் சிசு ஒன்றின் சடலம் பொலிஸாரினால் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சேரு நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதி ஒன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சேரு நுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் குறித்த சடலத்தினைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மேலும் பிறந்து ஒருசில நாட்களே ஆனபடியால் இது ஒரு சிசுக்கொலையா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. அதன்படி அண்மையில் திருகோணமலை வைத்தியசாலைகளில் குழந்தை பெற்றுக்கொண்டவர்களின் விபரம் ஆராயப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகளை சேரு நுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS