கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரொன்டோவில் 2013 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர்.
இதன்போது ரஞ்சனா கணகசபாபதி என்ற 52 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
அன்றைய தினம் காலை 11 மணியளவில் அர்பிஸ்(Arbis) என்பவர் ட்ரக் வண்டி ஒன்றை ஓட்டிச் சென்று நிறுத்தி வைக்கபப்பட்டிருந்த பஸ் மீது மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மனோரஞ்சனா கணகசபாபதி என்ற பெண் கோவிலுக்கு சென்ற வழியில் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் தொலைபேசியை பேசியவாறு தவறான வழியில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10 ஆண்டுகள் வாகனங்களைச் செலுத்த விதிக்கப்பட்டுள்ளது.