பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளத்துடன் பங்கேற்றார். மக்கள் மத்தியில் ஜூலிக்கான வரவேற்பும்,மரியாதையும் மேலோங்கி இருந்தது.
அதன்பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்கு ஜூலி மீதான வெறுப்பை அதிகரிக்கும் வகையில் மாறியது. இது குறித்து அவரது பெற்றோரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜூலியின் தம்பி ஜோஷ்வா கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர், அக்காவுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைத்து அனுப்பி வைத்தோம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் யதார்த்தமாக செய்யும் விஷயத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக போட்டு காயப்படுத்துகின்றனர்.
இதனால் எதற்காக அக்காவை அனுப்பி வைத்தோம் என வருத்தமாக உள்ளது. ஜல்லிக்கட்டில் அவருக்கு கிடைத்த மரியாதை இப்போது எங்கே போனது? . எனக்கு அக்காவை நினைக்க வெறுப்பாக உள்ளது.
நம் அக்கா எப்போது வெளியே வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எனது அக்காவினால் ஒட்டு மொத்த குடும்பமே மன வேதனையில உள்ளது. ஒவ்வொரு நாளும் அவர் தொலைக்காட்சியில் வரும்போது மிகவும் பயமாக உள்ளதாக ஜூலியின் தம்பி கூறியுள்ளார்.