மாற்றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரேமசந்திரன் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் ‘பம்மி’ விட்டதாக, தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கவலைக்குரிய விடயம்.
சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். இதுவரை மாற்றுத் தலைமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தது. வடக்கு மாகாண கல்வி அமைச்சராக, சர்வேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததும், மாற்றுத் தலைமை பற்றிய விடயத்தில் கதை இல்லை. அப்படி இருக்க முடியாது – என்றார்.