ஈரோடு நகரில் தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஈரோடு நகரில் உள்ள காமதேனு விடுதிக்கு பெங்களூருவில் இருந்த வந்த தேவா என்ற நபர் அறை எடுத்து தங்கியுள்ளார். காலையில் ரயில் டிக்கெட் எடுக்கச் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் அந்த நபர் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகிகள் அறைக்கு சென்று பார்த்த போது பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முகப்பு / இந்தியச் செய்திகள்
/ விடுதியில் பெண்ணின் கழுத்தை நெரித்து மர்மமான முறையில் கொலை - ஓட்டம் பிடித்த நபர் காதலனா.