புன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் " ஈர நிலத்தை எதிர்பார்த்து " கவிதை நூல் அறிமுக விழா 08.07.2017 அன்று வவுனியா அருந்ததி மண்டபத்தில் மாலை 3 மணிக்கு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி திரு.சி.சிவதாஸ் ஐயா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் திரு. லிங்கநாதன் ஐயா, புன்னகை அமைப்பின் பணிப்பாளர்களாகிய கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் ஐயா , முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் திரு. ந.ஸ்ரீஸ்கந்தராஜா ஐயா அவர்களும், கௌர விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், புன்னகை அமைப்பின் உறுப்பினர்கள், வன்னிபட்டறை அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். வரவேற்புரையை புன்னகை அமைப்பின்பு தலைவர்த்த திரு .சர்மிலன் அவர்கள் நிகழ்த்தி ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து தலைமை உரையினை தொடர்ந்து பிரதம விருந்தினர் உள நல வைத்தியர் வைத்திய கலாநிதி சிவசுப்புரமனியம் சிவதாஸ் நிகழ்த்தினார் அடுத்ததாக நூல் வெளியீடு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்கள் வெளியிட முதலாம் பிரதியை புன்னகை அமைப்பின் பணிப்பாளாராகிய திரு. ந.ஸ்ரீஸ்கந்தராஜா ஐயா அவர்கள் பெற இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை புன்னகை அமைப்பு காணடவின் உறுப்பினர்களாகிய திருமதி.இ.சுகுணா, திரு.செ.நவரட்ணராஜா ஆகியோரும் நான்காம் பிரதியை ஈச்சங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு தனபாலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொள்ள ஏனைய பிரதிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவரும் பெற்றுக்கொண்டனர். நூலின் நயவுரையை வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் திரு . கே .எஸ் .வரத்தான் மிகச்சிறப்பாக வழங்கினார் இறுதியாக கவிஞர் பெனில் அவர்கள் புன்னகை அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டதோடு அன்றைய புத்தக வெளியீட்டினூடாக சேகரிக்கப்பட்ட அணைத்து நிதியும் எழுத்தாளரிடம் கையளிக்கபடட்டது.
அவரின் எழுத்தாற்றல் மேலும் சிறக்க . இ. சுகுனா அவர்கள் ( பணிப்பாளர்ச சபை கனடா )சிறப்பு வாழ்த்துப்பா வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து நூலாரியியர் தனது ஏற்புரையில் தனது இலக்கிய வளர்ச்சிக்கு தோள் கொடுக்கும் சிறந்த இலக்கியவாதி திரு . வவுனியூர் இரா உதயணன் அவர்களுக்கும் புன்னகை அமைப்புக்கும் வன்னிப்பட்டறைக்கும் ஏனைய உறவுகளுக்கும் தனது கவி மூலம் நன்றியினை தெரிவித்தார் இறுதியாக புன்னகை அமைப்பின் செயலாளர் ரயிவ்கரனின் நன்றி உரையோடு சிறப்பான அறிமுகம் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது .நிகழ்ச்சித் தொகுப்பை மாவட்ட சமுகசேவை உத்தியோகஸ்தர் எஸ் .எஸ் .வாசன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார் என்பதும் இங்கே குறிபிடத்தக்கது .
இவரின் வெளியீட்டுக்கு உத்தவிய புன்னகை அமைப்புக்கும் திரு . ஜீவன் அவர்களுக்கும் uktamil இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமை அடைகிறது.
முழுமையான புகைப்படங்கள் கீழே .