நீதிபதியானார் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்த திருநங்கை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நீதிபதியானார் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுத்த திருநங்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜோயிதா மோதோக்தி என்பவர், தான் ஒரு திருநங்கை என்ற காரணத்தால் கல்லூரியில் சக மாணவ, மாணவிகளின் கேலிக்கு ஆளாகி இதனால் தன்னுடைய படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார்.
திருநங்கை என்ற காரணத்தால் பெற்றோர்களாலேயே, துரத்தப்பட்ட அவர், பின்னர் பல இடங்களிலும் வேலை தேடியுள்ளார்.
அவர் திருநங்கை என்ற காரணத்தால் யாரும் அவருக்கு வேலை தராமல் மறுத்துவிட்டனர்.
இதனால், தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தங்கி, அங்கேயே பிச்சையெடுத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதன்பிறகு, சமூக சேவகராக மாறி, சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படும் திருநங்கைகளின் உரிமைக்காக குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, எல்.ஜி.பி.டி. என்ற மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பினை துவங்கியுள்ளார்.
மேலும், இந்த அமைப்பின் மூலமாக அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
பாலியல் தொழிலாளியாக இருந்த இவர், தற்போது ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்துள்ளார்.
ஜோயிதா மோதோக்தி-யின் இந்த சமூக பணிகளுக்காக, தினாஜ்பூர் மாவட்டத்தின், லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், நாட்டிலேயே திருநங்கை ஒருவர் நீதிபதியாக அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

About UK TAMIL NEWS