சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தம்பதியினர்!

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமயை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அய்ர்ன் பாக்ஸால் சூடு வைப்பது, சுடு தண்ணீர் ஊற்றுவது போன்ற கொடுமைகளை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறுமைக்குள்ளான குடும்பத்தில் வளரும் சிறுவர்கள் சிறுமிகள் வேலைக்கு செல்லும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பர்மாவின் யங்கூன் நகரைச் சேர்ந்த ஒரு வீட்டில் 13 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த சிறுமியை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அயர்ன் பாக்ஸால் சூடு வைத்துள்ளனர்.
சிறுமி மீது சுடு தண்ணீர் ஊற்றுவது போன்ற பல்வேறு கொடுமைகளையும் செய்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த தம்பதியினரை கைது செய்தனர்.

About UK TAMIL NEWS