சமீப காலமாக மீண்டும் மீடியாக்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார் உலக நாயகனின் வாரிசு. ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க மறுத்து விடுகிறாராம்.
உலக நாயகனின் வாரிசு மீடியாக்கள் எந்த நேரத்தில் பேட்டி கேட்டாலும் கொடுத்து வந்தார். நட்புடன் பழகி வந்தார்.
ஆனால் இடையில் சில தவறான வழிகாட்டுதலால் மீடியாவிடம் இருந்து ஒதுங்க, தமிழில் படங்கள் இல்லாமல் போனது. இப்போது அப்படியில்லாமல் மீடியாக்களுடன் நெருங்கி வருகிறார். மீடியா கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பவர் லண்டனில் காதலர் ஒருவருடன் சுற்றுவதாக வரும் செய்தியை பற்றி கேட்டால் பதிலளிக்க மறுக்கிறாராம்.
நெருப்பில்லாமல் புகையுமா என்று கேட்டால், ஏன் ஐஸ்கட்டியில் இருந்துகூட புகை வருமே என்கிறாராம்.