தனது காதலியை 6 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்து நாய்களுக்கு உணவாக அளித்துள்ள கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வட இந்தியாவில் ரோதெக் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான குறித்த யுவதி, தனது சகோதரி வீட்டில் இருந்த போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த யுவதியின் அடையாளங்களை மறைக்கும் நோக்கில் அவரின் சடலம் நாய்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் அவரின் உடலின் ஒரு பகுதி காவற்துறைக்கு கிடைத்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு காதலன் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரை தினந்தோறும் காதலன் சித்திரவதை செய்துள்ளதாகவும், தன்னை திருமணம் முடிக்குமாறு வற்புறுத்தியதாகவும் அந்த யுவதியின் தாய், காவற்துறையில் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த காதலன் தனது ஆறு நண்பர்களுடன் இணைந்து அந்த யுவதியை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது