சிங்களத்தில் சீறிய தமிழ் அமைச்சர்; சிடுசிடுத்த எதிரணி உறுப்பினர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிங்களத்தில் சீறிய தமிழ் அமைச்சர்; சிடுசிடுத்த எதிரணி உறுப்பினர்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இன்றைய தினம் நாடாளுமன்றில் கடுந்தொனியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் பேசியபோது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த நிலையிலேயே அவர் சிங்கள மொழியில் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.
எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலரே இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனால் ஆத்திரமுற்ர அமைச்சர், “அபிட்ட கதாகரன்ன தென்ன, தினேஸ் குணவர்தன மாத்தயா அபிட்ட கதாகரன்ன தென்னகோ......” என்று ஆவேசமாக பேசியதோடு,
”நீங்கள் எப்பொழுதும் இனவாதத்தையே பேசிக்கொண்டிருக்காமல் எமக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் தாருங்கள், பொய்யாக எல்லாம் கூச்சலிடாதீர்கள். நாம் இன்றும் பல கஷ்டங்களை சுமந்து கொண்டு இருக்கின்றோம்.” என்று சிங்களத்தில் கூறினார்.
இதன்பின்னரும் எதிரணியினர் சபையில் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

About UK TAMIL NEWS