பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் நமீதா தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் நமீதாவை வைத்து பெட் கட்டியுள்ளார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் ஜூலி போலியாக நடிப்பதாக கூறுகிறார்கள்.
ஓவியாவும் நடிப்பதாக அவ்வப்போது கூறுகிறார்கள். உண்மையில் அனைவரும் ஸ்கிரிப்ட் படி நடிக்கத் தான் செய்கிறார்கள். இதில் ஆளாளுக்கு குறை சொல்லிக் கொள்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை அனுப்பி விடுவார்கள் என்ற நினைப்பில் நமீதா கிளம்பத் தயாராகிவிட்டார் என்பது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் தான் எலிமினேஷன் செய்கிறார்கள். அதற்கு நமீதா இன்றைக்கே கிளம்புகிறாரா. உங்கள் நடிப்புக்கு ஒரு அளவே இல்லையா பிக் பாஸ்காரர்களா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது கணேஷ் வெங்கட்ராம் என்று ஓவியாவும், சினேகனும் கூறுகிறார்கள். நமீதா நிச்சயம் எலிமினேட் ஆக மாட்டார் என்று பெட் கட்டியுள்ளார் ஓவியா.
பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் பரவாயில்லை என்று சொல்வது போன்று உள்ளது சினேகன் புரணி பேசும் விதம். சொல்லப் போனால் புரணி பேசுவதில் பெண்கள் சினேகனிடம் தோற்றுவிடுவார்கள் போல