லட்சங்களை பறிகொடுத்த ஜுலியின் கதறல்.... ஆர்த்தியின் செயலால் கடுப்பில் பார்வையாளர்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

லட்சங்களை பறிகொடுத்த ஜுலியின் கதறல்.... ஆர்த்தியின் செயலால் கடுப்பில் பார்வையாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஜுலி தான். ஆரம்பத்திலிருந்தே பலமுறை சக போட்டியாளர்களால் கிண்டலுக்குள்ளானார்.
ஜுலிக்கும், ஆர்த்திக்கும் இடையே சமீபத்தில் கூட சண்டை வந்து போனது. இந்நிலையில் இன்று ஓவியா ஜுலியின் குடும்பத்தை பற்றி விசாரித்தார்.
அப்போது ஜுலி தான் கடந்து வந்த பாதை பற்றி கூறினார். அப்போது ஜுலி மருத்துவராக ஆசைப்பட்டாராம். ஆனால் வசதியில்லாததால் செவிலியராக மாறியதாக கூறினார்.
மேலும் வெளிநாட்டில் பார்க்க விருப்பப்பட்டு ஒரு ஏஜெண்ட்டிடம் 3 லட்சம் கொடுத்து ஏமாந்து போய் கதறி அழுதாராம்.
இதை அறிந்த அவரது அப்பா, பணம் போனால் பரவாயில்லை திரும்பி வா என்று ஆறுதல் கூறினாராம். அடுத்த நாளே ஒரு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்து விட்டேன் என கூறிக்கொண்டிருந்தார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி அவருக்கு பின்னால் நின்று கொண்டு கேமராவை பார்த்து, ஜுலி ரீல் சுற்றுகிறார் என்பது போல் கையசைத்து கிண்டல் செய்தார்.

About UK TAMIL NEWS