விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பு இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கிய பயிற்சி சர்வதேச பயிற்சியாகும்.
குறித்த பயிற்சி திட்டம் சிங்கப்பூர் போன்ற சில சர்வதேச நாடுகளில் தற்பொழுதும் நடைமுறையில் இருக்கின்றது. என்று தெரிவித்துள்ளார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன.
இன்று முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் மாகவித்தியாலத்தில் நடைபெற்ற மெஹேவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்ட நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து சிறப்புரையற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முன்னொரு காலத்தில் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்களினாலும் வாள்வெட்டுக்களினாலும் சில சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கொலைசெய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல.
சட்டவிரோத ஆயுதம் தாங்கிய சிங்கள இளஞர்களினாலே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு செயற்பட்ட இளஞர்களிள் சிலர் உயிர் நீத்துள்ளனர். சிலர் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றனர்.
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து இயங்கியவர்களில் பலர் உயிர்நீத்துள்ளனர்.
யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து வீரர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒன்றும் தவறில்லை.
மேலும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தேன் என்று கூறுவதற்கு அச்சப்படத்தேவை இல்லை.
இவ்வாறான அச்சத்தில் இருந்து விடுபட்டு அவர்கள் சமுகத்துடன் ஒன்றினைந்து வாழ்வதற்கு முன்வர வேண்டும்.
மேலும் வடக்கு கிழக்கு மக்கள் திறமையானவர்கள் அவர்களில் அனேகமானவர்கள் துப்பாக்கியினால் சுடக்கூடிய பயிற்சி பெற்றறுள்ளனர். உங்களால் தற்பொழுதும் துப்பாக்கியை இயக்கமுடியும்.
அத்துடன் கண்ணவெடி பிரதேசங்களை இனங்கண்டு நீங்கள் விலத்திச் செல்லக்கூடியவர்கள். இவ்வாறான திறமையுள்ள வடக்கு கிழக்கு மக்கள் ஜனநாயக வழியில் ஒன்றிணைந்து இந்த நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.