செர்பியாவில் 20 ஆண்டு தீவிர முயற்சிக்கு பின் உயிரை பணயம் வைத்து 60 வயதில் குழந்தை பெற்ற பெண்ணை அவரது கணவர் விட்டு விலகிச்சென்றுள்ளார்.
செர்பியாவை சேர்ந்த தம்பதி Serif Nokic (வயது 68), Atifa Ljajic (வயது 60), இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த Atifa Ljajicவுக்கு 60 வயதில் ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளது.
நல்லபடியாக குழந்தை பிறந்த நிலையில் Serif Nokic தனது மனைவி, குழந்தையை விட்டு விலகிச்செல்ல முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, முதலில் நான் குழந்தைக்கு மறுப்பு தெரிவித்தேன். தற்போது, இரவில் குழந்தை அழுவதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
நான் வயதான உடல்நலம் குன்றிய நபர், இந்த வயதில் குழந்தையை வளர்க்க முடியாது. ஆனால், Atifa Ljajic குழந்தையை வளர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால், இருவரையும் விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் Atifa Ljajic விந்தணு நன்கொடை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் குழந்தையை தனது குழந்தை என பதிவு செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Atifa Ljajic கூறியதாவது, இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது கடினம் என தெரியும், ஆனால் எனது வாழ்க்கையில் குழந்தை வேண்டும் என்பதே என் விருப்பம்.
தற்போது அது நடந்து விட்டது, நான் பயப்படவில்லை, என் குழந்தையை நான் தனியாக வளர்ப்பேன் என உறுதியளித்துள்ளார்.