அச்சுவேலி அரச சான்றுபெற்ற நன்னடத்தை பாடசாலையில் இருந்து காணாமல் போன சிறுவர்கள் ஐவரும் வளலாய் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெல தெரிவித்தார்.
சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களால், சிறு குற்றச் செயல் ஒன்றுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் ஐவர், நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தனர்