2016ம் ஆண்டு இடம்பெற்றிருந்த வாகன விபத்துக்களில், 400 பேர் கைபேசி உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்தும் போது இடம்பெற்ற விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்சின் நெடுஞ்சாலைகள் பாதுகாக்கு கண்காணிப்பு மையத்தினால் வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையிலேயே இது தெரியவந்துள்ளது.
கடந்த யூன் மாதம் மட்டும், 329 பேர் வாகன விபத்துக்களினால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ள இப்புள்ளிவிபரம், கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் போது, இது 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் 2046 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1443 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களில் இறப்பவர்கள் தொகை ஆண்டுதோறும் அண்ணளவாக 40 பேரினால் அதிகரித்துச் செல்வதாக அப்புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.