26 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனத்துடன் 47 வயதுடைய நபர் காணமற் போயுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையாகிய குறித்த நபரை கடந்த 5 நாட்களாக காணவில்லை என, அவரது மனைவி தெரிவிக்கின்றார்.
கடந்த 11ஆம் திகதி காலை, வேன் செலுத்தும் பயிற்சியில் ஈடுபடபோவதாகக் கூறிவிட்டு குறித்த நபர் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
அன்றைய தினம் மாலைவரை அவர் வீடு திரும்பாத நிலையில், காவல்துறையில் மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் தனது வேனை, அரநாயக்க - உஸ்ஸாப்பிட்டிய, கோப்பிவத்தை பிரதேசத்தில் உள்ள நபருக்கு 24 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், குறித்த நபர் காணாமற்போன தினத்தில், அவரது வீட்டுக்கு அருகில் வசித்துவந்த திருமணமான பெண்ணும் காணாமற் போயுள்ளார்.
அந்த பெண் காணாமற் போனமை குறித்து, ஹெம்மாத்தகமை காவல்துறை நிலையில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமற் போன பெண்ணுக்கும், நபருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தின் உத்தவைப்பெற்று, குறித்த நபரின் அலைபேசி தொடர்பாடல், குறுஞ்செய்திகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.