அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையிலுள்ள தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். கணவர் தம்மை கைவிட்டுவிட்டதாக கூறும் இவருக்கு சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கு முன்னரே ஒரு குழந்தையை விற்றுவிட்டதாக கூறும் இவர் தற்போது இந்த பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையையும் விற்கப்போவதாக எந்த சலனமுமின்றி கூறுகிறார்.
இது பற்றி அவர் கூறுவது "இந்த குழந்தையை லட்சுமி என்பவர் 2000 ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாக சொன்னார்கள் ஆனால் இவ்வளவு குறைவான தொகைக்கு குழந்தையை விற்க எனக்கு விருப்பம் இல்லை. தற்போது வேறொருவர் குழந்தையை வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனர், ஆதலால் அவர்களிடம் விற்க வந்தேன். என்னால் குழந்தையை வளர்க்க முடியாது" என கூறினார்.
பெற்ற தாயே குழந்தையை விற்பது எத்தனை வீபரிதமும், வேதனையும் அளிக்கும் என்பதை அறியாமலே இதை தீபா செய்து வருகிறார் என்பது அவர் பேச்சிலிருந்தே உணரமுடிகிறது.
இந்த தகவலை அறிந்து சைல்டு லைப் அமைப்பினர் இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் குழந்தைகள் நல குழுவில் குழந்தையை ஆஜர்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.