குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவரினால் நிராகரித்த சம்பவம் நுவரெலியா வைத்தியசாலையில் இடம்பெற்றுது.
இதன்காரணமாக வைத்தியசாலை அதிகாரிகள் சிரமத்திற்கு அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதிக்கமைய இந்த பெண்27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் தொடர்பு வைத்திருந்தார்.
அந்த பெண் கர்ப்பமடைந்தவுடன் அவர் அந்த பெண்ணை விட்டு செல்ல ஆரம்பித்துள்ளதாக இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது தெரியவந்துள்ளது.
லிந்துல பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அந்த நபர் தன்னை கைவிட்டு செல்ல ஆயத்தமாகுவதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறான முறைப்பாடு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயது முழுமையடைந்த இருவர் விருப்பத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.