இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இதில் ஷேவாக், டாம்மூடி, பால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், தோடா கணேர் ஆகியோர் விண்ணப்பித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரியும், விண்ணப்பித்துள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 9-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சியாளர் நேர்காணலை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை கொண்ட பி.சி.சி.ஐ. கிரிக்கெட் ஆலோசனை குழு நடத்துகிறது.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணல் வருகிற 10-ந்தேதி மும்பையில் நடக்கிறது என்றார்.
நேர்காணலில் பங்கேற்பவர்களிடம் அணியை முன்னேற்ற செயல் திட்டங்கள், அணுகுமுறை, போன்றவை குறித்து கேட்கப்படும் அதில் திருப்தி அளிக்கும் விதமாக பதில் அளிக்கும் ஒருவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார்