நாட்டில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிரடி படையினர் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனவாத செயற்பாடுகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு, உரிய பிரிவுகளுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு உட்பட தெரிவு செய்யப்பட்ட ஏனைய மாவட்டங்களில், மோட்டார் சைக்கிள் குழு, நடமாடும் சேவை, அவசர வீதி நடவடிக்கைகள் என்பனவற்றை பொலிஸ் விசேட அதிரடி படை அதிகாரிகளினால் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்திய பொலிஸ் விசேட அதிரடிபடை குழு, தங்கள் செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பொலிஸ் விசேட அதிரடிபடையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.ல