- Eelatheepam Sri Lankan Breaking NEWS
இறைவி’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் ‘மெர்க்குரி’. இதுதவிர தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் ‘மேயாத மான்’என்ற படத்தையும் தயாரிக்கிறார். இவற்றின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் டிஜிட்டலில் ரூ. 1 கோடி செலவில் படம் எடுக்க முடியும். பெரிய படங்களுடன் போட்டி போடமுடியும் என்று நிரூபித்தவர். அவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்.
ஒரு காலத்தில் நான் நடிக்க வந்த போது, இவன் ஏன்டா நடிக்க வர்றான். டைரக்ட் பண்ணலாமே என்று என் காது படவே சொல்லி வலியை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி, எஸ்.ஜே.சூர்யாவால் நடிக்க முடியும் என்று நம்பி என்னை ‘இறைவி’ படத்தில் நடிக்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். என் நடிப்பு திறமையை உலகத்துக்கே காட்டியவர் அவர். அவருடைய பட நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவன தொடக்க விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.
கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாதமான் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். இது தவிர பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வித்தியாசமானவை. கண்டிப்பாக சாதனைபடைக்கும்.
இவருடைய பட நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களையும் தயாரிக்கும். அந்த விழாவுக்கு நானும் வந்து வாழ்த்துவேன்” என்றார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மணிரத்னம், பாரதிராஜா, கார்த்திக் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About UK TAMIL NEWS