பிரித்தானிய மான்செஸ்டர் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் பகுதியில்அநாதரவாக கைவிடப்பட்டிருந்த மர்மப் பையினால் விமான நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அநாதரவாக கிடந்த இந்த மர்மப் பையினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸார் குவிக்கப்பட்டு, விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு காணப்பட்ட மர்மப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் வெடிகுண்டு செயலழிக்கச் செய்யும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை பிரித்தானியாவில் மூன்று தடவைகள் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் மர்மப் பை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் விமான நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, லண்டன் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பானது, இப்பொழுது தான் தாக்குதல் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது தான் தொடக்கம் என்று தனக்கு சார்பான இணையத்தளத்தின் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
About UK TAMIL NEWS