அந்த வகையில் மின்சார விநியோகத் தடையானது காலை 8.00 மணி முதல் மாலை 5.30 வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் நாவாந்துறை, மீனாட்சிபுரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப்பிரதேசம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகிய பகுதிகளில் மின் விநியோக தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில், சிலாவத்தை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட சில பகுதிகளிலும், வவுனியாவில், நெளுக்குளம் பாடசாலைப் பிரதேசம், கூமாங்குளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளிலும் மின் தடை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.