கனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார்.
ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் அதிகாலை 1:13 மணியளவில் எரிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவு தெரிவித்துள்ளது.
Ellesmere வீதியில் அமைத்துள்ள Canbe உணவகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் கலைச்செல்வி கடுமையான தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவினர் தெரிவித்தனர்.
உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பின் ரொரண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS