வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்படுவதாக முறைப்பாடு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்படுவதாக முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புபட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட கைதியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மரங்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் பளைப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர்,
வழக்கின் விசாரணைக்களுக்காக இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட இருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் குளிப்பதற்காக கைதிகளுக்கு ஐந்து வாளி தண்ணீர் மாத்திரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐந்து வாளியை விட மேலும் ஒருவாளி தண்ணீரை எடுத்தமையால் கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரி கடுமையாக தாக்கியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை கிளநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நிறுத்தி வைத்திய அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகின்ற கைதிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்,
அண்மையில் தருமபுரம் பகுதியை சேர்ந்த கைதியொருவர் இவ்வாறு தாக்குதலால் உயிரிழந்திருந்ததாகவும் எனவே, நேற்றைய சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறித்த வழக்கு தொடர்பான சந்தேகநபர் தாக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் கூட்டாக இணைந்து மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS