பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து தினமும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான பணத்தில் 2 கோடியே 94 இலட்சம் ரூபாவை செலவு செய்து மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் கூடிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளர்களான 5 பேரை நவம்பர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.