வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும், யுவதி ஒருவரும் பட்டப்பகல் வேளையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப் பகுதி இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல்-01 மணியளவில் யாழ். செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். செம்மணி வீதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுக்குள் இளம் குடும்பஸ்தரொருவரும், யுவதியொருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.
சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் தீவுப் பகுதியொன்றில் தனியார் பேருந்து நேரக் கணிப்பாளராக இருந்து வருவதுடன் ஏற்கனவே திருமணமானவர் எனவும்தெரிய வருகிறது.
குறித்த இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த முச்சக்கர வண்டியின் திறப்பு இரு இளைஞர்களாலும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இருவரும் தமக்கு ஒரு தடவை மன்னிப்பு வழங்குமாறு கெஞ்சி மன்றாடியுள்ளனர்.
எனினும், அதனைப் பொருட்படுத்தாத குறித்த இரு இளைஞர்களும் சம்பவம் தொடர்பில் ஊரவர்களுக்குத் தெரிவிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அதற்கிடையில் குறித்த இருவரும் அவ்விடத்திலிருந்து நழுவிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப் பகுதி இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தரையும், யுவதியையும் ஆவேசத்துடன் தேடி வருகின்றனர்.
வாகன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.