பாடசாலை பேரூந்து உருண்டதால் ஐந்து பிள்ளைகள் அதிர்ச்சியில்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பாடசாலை பேரூந்து உருண்டதால் ஐந்து பிள்ளைகள் அதிர்ச்சியில்!

ரொறொன்ரோ-டவுன்ரவுனில் பாடசாலை பேரூந்து ஒன்று பேரூந்து ஒன்று வாகனமொன்றினால் மோதப்பட்டு உருண்டுள்ளது.
றிச்மன்ட்வீதியில் மேற்கு பாதையில் சென்று கொண்டிருந்த எஸ்யுவி வாகனம் ஒன்று குறுகிய பாடசாலை பேரூந்து ஒன்றுடன் மோதியுள்ளது.
அங்கவீனமான பிள்ளைகளிற்கான இப்பேரூந்து பார்லிமென்ட் வீதிக்கு சிறிது மேற்கே பேர்க்லி வீதியில் சென்று கொண்டிருக்கையில் புதன்கிழமை காலை 9மணிக்கு சிறிது பின்னராக இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாகனத்தில் இருந்த அனைத்து பிள்ளைகளும் இருக்கை பட்டிகள் அணிந்திருந்ததால் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்எச்சரிக்கை காரணமாக பிள்ளைகள் நோயுற்ற குழந்தைகளிற்கான மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பேரூந்தின் சாரதியும் முன்எச்சரிக்கையாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்திற்கான காரணம் குறித்து புலன்விசாரனை நடைபெறுகின்றது.
எஸ்யுவி வாகனம் அதி உயர் வேகத்தில் சிவப்பு விளக்கினூடாக சென்றிருக்கலாம் என தனது புரிதல் உள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேரூந்து மார்க்கெட் லேன் யூனியர் மற்றும் சீனியர் பொது பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தினால் பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து காணப்பட்டனரெனவும் சம்பவத்தின் பின்னர் வழமைக்கு திரும்பிவிட்டனரெனவும்
கூறப்படுகின்றது. காயமடைந்தவர்கள் என கருதப்படுகையில் இளம் பெண் ஒருவருக்கு மட்டும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பேரூந்தில் பயணம் செய்த மாணவர்களின் பெற்றோர்களிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக ரொறொன்ரோ மாவட்ட கல்விசபை தெரிவிக்கின்றது

About UK TAMIL NEWS