பிரபல நகைச்சுவை நடிகரான கொட்டாச்சியை அடித்து உடைத்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம் போன்றவைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை நடிகரான கொட்டாச்சிக்கு இன்று பிறந்தநாள், இதனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு தனியறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார்.
அதன் பின் மது அருந்துவதற்காக வெளியில் சென்றுள்ளார். மது அருந்திய அவர் அங்கிருந்த ஆட்டோவின் மூலமாக சேலத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, இடையில் ஒரு கும்பல் அந்த ஆட்டோவை மடக்கியுள்ளது. கும்பலில் இருந்த சிலர் ஆட்டோவின் உள்ளே இருந்த நடிகர் கொட்டாச்சியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர் அந்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்ற, அந்த மர்ம கும்பல் கொட்டாச்சியை அடித்து உதைத்து அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் செயின், 3 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அவர் காலை அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் அந்த மர்ம கும்பலை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.