ஜெயலலிதா சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு உயில் எழுதிய வழக்கறிஞர் நந்தகுமார் தனியார் தொலைக்காட்சிக்கு கூறியதாவது,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து என்பது, ஆர்.கே.நகரில் வேட்பாளராக நிற்கும் பொழுது அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அந்த சொத்துக்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. அந்த சொத்துக்களில் அவர் இறந்த பிறகு வாரிசுதாரர்கள் என்று இன்று வரை அடையாளம் தெரிந்தவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக் இவர்கள் இருவரும் தான்.
இந்த சொத்துகளில் போயஸ்கார்டனும் அடங்கும்.இந்த சொத்துகள் அனைத்தும் வாரிசுதாரர்கள் என்ற அடிப்படையில் உரிமை கோருவதற்கு இரண்டு பேருக்கு மட்டும் தான் உரிமை உண்டு.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அவருடன் இருந்தவர்களோ, கூட வசித்தவர்ளோ அனைவரும் உரிமை இழந்து விடுகின்றனர். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஜெயலலிதா இறந்த பின்பு அங்கு தங்கியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அத்துமீறி தங்கியிருப்பதாகவோ, ஆக்கிரமிப்பாளர்களாகவோ தான் சட்டத்தில் கருத வேண்டும்.
ஜெயலலிதா தங்குவதற்கு கொடுத்த உரிமை அவர் இறந்தவுடன் ரத்தாகிறது.
இன்று திடீர் என்று உயில் என்று சொன்னால் அது பதிவு செய்யப்படாத உயிலாக இருந்தால் செல்லுபடியாகுமா என்றால் சந்தேகத்துக்கு உரியது.
பதிவு செய்ததாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.