தெற்கு பிலிப்பைன்ஸின் மிடானவ் தீவில் உள்ள பாடசாலை ஒன்றினுள் புகுந்த நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மாணவ, மாணவிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் எனவும் அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனி நாடுகோரி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் கடந்த 23ஆம் திகதி முதல் தெற்கு பிலிப்பைன்ஸிலும் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையானது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று காலை மிடானவ் தீவில் உள்ள பாடசாலைக்குள் பிஐஎஃப்எஃப் அமைப்பின், 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள், மாணவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியதனை அடுத்து, அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாணவ, மாணவிகளை தீவிரவாதிகளிடமிருந்து உயிருடன் மீட்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக பிக்காவயன் நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.