யாழில் கொடுத்த கடனுக்காக தொலைபேசியைப் பறித்தெடுத்தவருக்கு நடந்த கதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழில் கொடுத்த கடனுக்காக தொலைபேசியைப் பறித்தெடுத்தவருக்கு நடந்த கதி

வங்கியில் கடனாக பெற்றுக்கொடுத்த பணத்திற்காக, அந் நபரின் கைபேசியினை அபகரித்து சென்ற 40வயதுடைய நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் கூறினர்.


இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இமையாணன் பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தனது வங்கி கணக்கு ஊடாக அதே பகுதியினை சேர்ந்த பெண் ஒருவருக்கு 60ஆயிரம் ரூபா பணத்தினை கடனாக பெற்றுக்கொடுத்துள்ளார்.

பணத்தினை பெற்றுக்கொண்டவர் அதனை நீணடகாலமாக திருப்பி செலுத்தாது இழுத்தடிப்பு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பணத்தினை பெற்றுக்கொடுத்தவர், பணத்தினை கேட்க சென்ற போது இருவருக்கும் இடையில் கைகலப்பு நடைபெற்றதாக அறியப்படுகிறது.

இதன் போது பணத்தினை வாங்கி கொடுத்தவர் அப் பெண்ணினை கீழே தள்ளிவீழத்தி கைபேசியினை அபகரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கீழே வீழந்த பெண் கண்ணாடி ஒன்றுடன் மோதுண்டதில் கையில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறனி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அபகரித்து சென்ற கைபேசியும் கைபெற்றப்பட்டுள்ளது. கைதான நபருக்கு எதிராக கொள்ளையடித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS