தமது கணவனை இழந்த ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் இருந்து மீண்டும் நாடுதிரும்புவதற்கு உதவியைக் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்கொட்லாந்தின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
டயான் டி சொய்சா என்ற எடின்பேர்க் பகுதியைச் சேர்ந்த குறித்தப் பெண் ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார்.
அப்போது அவர் தங்கி இருந்து விடுதியில் பணியாற்றி வந்த பிரியஞ்சன டி சொய்சா என்பவரை காதலித்து, திருமணம் செய்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு எடின்பேர்கில் உள்ள தமது வீட்டை விற்று, இலங்கையில் தமது கணவருடன் வசித்து வந்த போது, அவரது கணவர் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அநாதரவாகியுள்ள அவர், மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கான முயற்சிகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.