ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தி வெளிநாடு போவதா?: பா.ஜனதா கண்டனம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தி வெளிநாடு போவதா?: பா.ஜனதா கண்டனம்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இத்தாலிக்கு செல்ல இருப்பதாக தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் எனது பாட்டியையும் (சோனியா தாயார்) குடும்பத்தினரையும் சந்திக்க இத்தாலி செல்கிறேன். அங்கு சில நாட்கள் அவர்களோடு தங்கி இருக்க போகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வருகிற 19-ந் தேதி ராகுல் காந்தியின் பிறந்த நாள் ஆகும். அவர் தனது பிறந்த நாளை இத்தாலியில் பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல்காந்தி வெளிநாடு செல்வது குறித்து பாரதிய ஜனதா தலைவர் கைலாஷ் விஜயவர்க்கி கூறும் போது, விவசாயிகள் பற்றி ராகுல்காந்தி எந்த கவலையும் பட வேண்டாம். ராகுல் காந்திக்கு அரசியலே ஒரு சுற்றுலா போன்றதுதான்.
நாம் சிறு குழந்தையாக இருக்கும் போது, கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வோம் அதேபோல் ராகுல் காந்தி பாட்டி வீட்டுக்கு செல்கிறார் என்று கூறி உள்ளார்.
பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறும்போது ராகுல்காந்தி தனது வெளிநாட்டு பயணத்தின் மத்தியில் இந்தியாவுக்கும் வருவார் என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.
2015-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் ராகுல்காந்தி 56 நாட்கள் மாயமாகி இருந்தார். அவர் அப்போது வெளிநாட்டுக்கு சென்று தங்கி இருந்தார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதேபோல் இப்போது ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட முக்கிய அரசியல் நடவடிக்கைகள் இருக்கும் நேரத்தில் வெளிநாடு செல்வதும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவர் ஒருவர் கூறும் போது, ஜனாதிபதி தேர்தல் விவகாரங்களை சோனியாகாந்தி கவனித்து வருகிறார். எனவே, ராகுல் வெளிநாடு செல்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.
காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைவர் ரந்தீப்சிங் கூறும்போது, ராகுல்காந்தி தனது 93 வயது பாட்டியையும், குடும்பத்தினரையும் சந்திக்க செல்கிறார். வயதானவர்களை அன்பாக கவனித்து கொள்வது நமது கலாச்சாரத்தில் முக்கியமானது. அதை ராகுல்காந்தி செய்து வருகிறார் என்றார்.
சிலர் தனது தாயாரை சந்திக்க செல்லும் போது கூட டி.வி. நிருபர்களையும் அழைத்து சென்று அந்த காட்சிகளை வெளியிட செய்கிறார்கள் என்றும் கூறினார். பிரதமர் மோடியை மறைமுகமாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS