மட்டக்களப்பில் பாலமீன்மடு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுவனொருவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பாலையா ஜெயகாந்தன் என்னும் 16 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனின் சடலம் வீட்டின் அறையொன்றில் இருந்து, கழுத்தில் சேலை சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சடலம் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.