பண்டாரவளை பிரதேசமெங்கும் கறுப்பு கொடிகள்! பொலிஸார் குவிப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பண்டாரவளை பிரதேசமெங்கும் கறுப்பு கொடிகள்! பொலிஸார் குவிப்பு

பண்டாரவளை பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பிரதேசமொங்கும் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் தமது வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியும் மற்றும் சேதத்திற்கான நேர்த்தியான கொடுப்பனவுகள் இன்மை காரணமாகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா ஓயா திட்டத்தினால் 4000 கிணறுகள் வரை வற்றிபோயுள்ளதாகவும், இதனால் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, நகரில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காணமாக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உமா ஓயா திட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS