இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் அதற்கேற்ப பெருமைகளையும், சிறப்புக்களையும் கொண்டு தனித்தன்மையோடு விளங்குகின்றன.
நாம் பல மர்மநிகழ்வுகள் நடைபெறும் கோயில்களைப் பார்த்திருக்கிறோம்ய சில சமயங்களில் அவை வெளிச்சத்துக்கு வராமலே போய்விடுகின்றன. ஆனால் சில மர்மங்கள் எளிதில் நம்ப முடியாததாகவும், நம்மை அப்படியே வியப்பில் ஆழ்த்துவதாகவும் அமையும்.
அப்படி ஒரு நிகழ்வு பற்றிதான் இந்த பகுதியில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
பேசும் சிலைகள்
ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோயிலில் இரவில் கடவுள் சிலைகள் பேசுகின்றனவாம்.
இரவில் மர்மங்கள்
பூசை முடிந்து இரவில் கோயிலுக்குள் நடக்கும் மர்மங்கள் அந்த ஊர்காரர்களை மட்டுமின்றி அனைவரையும் பீதிக்குள்ளாக்குகிறது.
பீகார் மாநிலத்தின் பக்ஸார் பகுதியில் அமைந்துள்ளது ராஜ ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோயில். இது 400 வருடங்களுக்கும் பழமையான கோயில் ஆகும்.
இங்கு வந்து வழிபட்டால் திரிபுர சுந்தரி நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவருவார் என்பது நம்பிக்கை.
இந்த கோயிலின் முன் வளைவு வாயில் பக்தர்களை வரவேற்கும் படி மிகுவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
இந்த கோயிலில் இரவு நேரங்களில் மர்மமான குரல்கள் ஒலிக்கின்றன. இதை பக்தர்கள் சிலர் கேட்டுள்ளனர்.
தொடரும் மர்மங்கள்
இதுகுறித்து பல ஞானிகளும், கோயில் பெரியவர்களும் பல சந்தேகங்களைத் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கே இது புரியாத புதிராக உள்ளது.
இந்த பேசும் சிலை விசயம் வெளியில் தெரிந்தவுடன், இந்த கோயில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
கலியுகத்தில் கடவுள்
கலியுகத்தில் கடவுள் பேசுகிறார் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான உண்மை என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உண்மையில் கடவுள்தான் பேசுகிறாரா?
உண்மை என்ன?
இது கோயிலின் கருவறையில் இருந்து வரும் ஒலியை அசரீரீ என்று எண்ணிவிடக்கூடாது. இது தாய் திரிபுர சுந்தரியின் அருள்வாக்கு என்று கோயில் பூசாரிகள் கூறுகின்றனர்.
சிலையுடன் சிலை பேசுகிறதா?
இந்த கோயிலின் சிலைகள் ஒன்றுடன் ஒன்று பேசுகிறது என்கின்றனர் சிலர். உண்மையில் அந்த பேச்சு சத்தங்கள் கரு