மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து வளர்ச்சியடையாத சிசுவின் உடல் கழிவறை குழிக்குள் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இரத்த போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், இந்த குழந்தையை இரகசியமாக பெற்றெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புத்தல, பெல்வத்தை, பாலவெல பிரதேசத்தில் வீடொன்றில் உள்ள கழிவறை குழிக்குள் இந்த சிசுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண் சிசுவை பெற்றெடுத்து துணியில் சுற்றி கழிவறை குழிக்குள் போட்டுள்ளார்.
அழுகிய நிலையில் காணப்பட்ட சிசுவில் உடல் மொனராலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்ப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.