சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள சிந்தாரிப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மணிகண்டன் (என்ற) தேவயானி.
திருநங்கையான தேவயானி நேற்று முன்தினம் இரவு சென்னை சிம்சன் அருகே அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அருகில் இருந்த கூவம் ஆற்றில் தேவயானி குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் நண்பர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கூவத்தில் இறங்கி தேவயானியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
வெகுநேரம் ஆகியும் தேவயானி கிடைக்காததால், மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடும் பணி நடைப்பெற்றது.
இந்நிலையில், நேற்று காலை தேவயானியின் சடலம் கூவம் ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தேவயானி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.