துறைமுக நகர்த் திட்டத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேல் மாகாண கடல் எல்லையில் வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமான என்பது குறித்து நாரா நிறுவனம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வுகளை நடத்துவதற்காக துறைமுக அபிவிருத்தி நகர் திட்டம் நாரா நிறுவனத்திற்கு 63 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.
துறைமுக நகர்த் திட்டம் முன்னெடுக்கப்படும் இடத்திலிருந்து தெற்காக பத்து கிலோ மீற்றருக்கும் வடக்காக பத்து கிலோ மீற்றருக்கும் உள்ள கடல் பரப்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்த உள்ளது.
நாரா நிறுவனத்தின் விசே நிபுணர்கள் இந்த ஆய்வினை மேற்கொள்ள உள்ளனர் என மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.