ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட கேப்பாப்புலவு மக்கள்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட கேப்பாப்புலவு மக்கள்!

வடக்கு, கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வந்திருந்தனர்.
இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றிணை நடத்தியுள்ளார்கள்.
இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பேருந்திலும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஒரு பேருந்திலுமாக மக்கள் சென்று கொழும்பு, கோட்டையில் இருந்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், தற்பொழுது ஜனாதிபதியை சந்திப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் எட்டு பேரை தெரிவு செய்து பொலிஸார் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

About UK TAMIL NEWS