மாதவன் கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகின்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவன் தான் விட்ட இடத்தை தமிழில் பிடித்துவிட்டார்.
இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது தான் தன் மகன் குறித்து முதன் முறையாக பேசினார்.
தன் மகன் நீச்சல் போட்டியில் மாநில அளவில் சாம்பியனாகவும், அடுத்த வாரம் இந்திய அளவில் நடக்கும் போட்டியிலும் கலந்துக்கொள்ளவிருக்கின்றார் என கூறினார்.
அப்படி அவர் பேசும் போது உடனே அங்கிருக்கும் தொலைக்காட்சியில் மாதவனின் மகன் தோன்றி பேச, மாதவன் ஒருக்கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுவிட்டார்.