அரளி விதை சாப்பிடுவாரா? அரசியல் தலைவரை வறுத்தெடுத்த பிரபல நடிகர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அரளி விதை சாப்பிடுவாரா? அரசியல் தலைவரை வறுத்தெடுத்த பிரபல நடிகர்

மாட்டிறைச்சி தான் சாப்பிட வேண்டுமா என ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட தமிழிசையிடம், அவர் அரளி விதை சாப்பிடுவாரா என நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக-வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ராதாரவி கூறுகையில், மாட்டிறைச்சி பிரச்சனை, இந்தி போராட்டம், விவசாய பிரச்சனை போன்ற எல்லா வித பிரச்சனைகளுக்கும் மு.க ஸ்டாலின் தான் குரல் கொடுத்து வருகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனாதிபதி தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க கூட சசிகலாவை சிறையில் சந்தித்து கேட்டு வருவதாக ராதாரவி கூறியுள்ளார்.
மேலும், பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஸ்டாலினிடம் மாட்டிறைச்சிக்கு பதில் சிங்கம் கறி சாப்பிடலாமே என கூறியதற்கு பதிலடி கொடுத்த ராதாரவி, நீங்கள் சைவம் தானே. கேரட், வெண்டக்காய் போல அரளி விதையை சாப்பிட வேண்டியது தானே என கூறியுள்ளார்.
அதிமுக -வினர் திமுகவுக்கு வர வேண்டும் என கூறிய ராதாரவி, திமுக வெற்றி பெற்றால் எல்லோரும் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என கூறியுள்ளா

About UK TAMIL NEWS